ராஜினாமா கடிதம் எழுதி வைத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விடுமுறை தராததால் விரக்தி
சென்னை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ரோந்து வாகனத்தில் பணி செய்து வந்தார். #police #tamilnews
தாம்பரம்,
சென்னை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ரோந்து வாகனத்தில் பணி செய்து வந்தார். அவருக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ந்து பணி வழங்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ராஜினாமா கடிதம் எழுதி இன்ஸ்பெக்டர் அறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அந்த கடிதத்தில், காலையில் வேலைக்கு வந்தால் தனக்கு மட்டும் மாலையிலும் பணிகள் ஒதுக்கீடு செய்வதாகவும், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் 2 குழந்தைகளை நான்தான் காப்பாற்ற வேண்டும். எனவே குடும்பத்தை காப்பாற்ற எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்’ என எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அவர் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அப்போது சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் திருவான்மியூரில் வைரமுத்து வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் அவருக்கு விடுமுறை தர முடியவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இதுபோன்று செய்துவிட்டார். அவருக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Tags :
Next Story