முதியோர்கள், குழந்தைகள் கால்கடுக்க நிற்கும் பரிதாபம் அயனாவரம் பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்படுமா?


முதியோர்கள், குழந்தைகள் கால்கடுக்க நிற்கும் பரிதாபம் அயனாவரம் பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 23 Jan 2018 4:30 AM IST (Updated: 23 Jan 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அயனாவரம் பஸ் நிலையத்தில் முதியோர்கள், குழந்தைகளும் கால்கடுக்க பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். #TamilNadu

சென்னை,

சென்னை அயனாவரம் பஸ் நிலையத்தில் முதியோர்கள், குழந்தைகளும் கால்கடுக்க பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே பஸ் நிலையத்தில் அமருவதற்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அயனாவரம் பஸ் நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புரசைவாக்கம், பெரம்பூர் உள்பட அருகில் இருக்கும் பகுதிகளுக்கு மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையம் விசாலமாக காட்சி அளித்தாலும், அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு கிடைப்பது இல்லை.

குறிப்பாக பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், முதியோர்களும் பஸ்சுக்காக கால்கடுக்காக காத்திருக்கும் பரிதாப சூழல் உள்ளது. கால்வலி தாங்க முடியாமல் வெறும் தரையில் மக்கள் அமரும் நிலையும் காணப்படுகிறது.

எனவே மாநகர போக்கு வரத்து கழக அதிகாரிகள் அயனாவரம் பஸ் நிலையம் மட்டுமின்றி, இருக்கைகள் இல்லாமல் இருக்கும் பஸ் நிலையங்களில் அமர்வதற்காக இருக்கைகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அயனாவரம் பஸ் நிலையத்துக்குள்ளே வட்டார போக்குவரத்து அலுவலகம்(ஆர்.டி.ஓ.) இயங்கி வருகிறது. ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு எண் போன்றவற்றிற்காக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

அப்போது அவர்களுடைய வாகனங்கள் பஸ் நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையமா? இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமா? என்று எண்ணத்தோன்றுகிறது. பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால், அயனாவரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை வெளியே எடுத்து செல்லும் போதும், உள்ளே வரும் போதும் டிரைவர்கள் மிகுந்த சிரமத்துடன் பஸ்சை இயக்குகின்றனர்.

இதனால் அங்கு ஏதேனும் விபத்துக்கள் நேரிடும் முன்பு இந்த விவகாரத்திலும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story