எடியூரப்பாவுக்கு ‘குடைச்சல்’ கொடுக்க காங்கிரஸ் திட்டம் பிரசன்னகுமார் களமிறங்க வாய்ப்பு
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பாவுக்கு ‘குடைச்சல்‘ கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு,
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பாவுக்கு ‘குடைச்சல்‘ கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அக்கட்சி சார்பில் பிரசன்னகுமார், எடியூரப்பாவை எதிர்த்து மல்லுக்கட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பா.ஜனதா கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பாவை, அந்த கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்து உள்ளார். இவர் மாநில ஆட்சியை தீர்மானிக்கும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் கடந்த 1983-ம் ஆண்டு முதன் முதலில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைபோல் 2004, 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா முதல்-மந்திரி வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து இதுவரை சிகாரிபுரா தொகுதி அந்த கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது.
இந்த சாதனையை உடைத்து எடியூரப்பாவை, இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசைபை தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி வரிந்து கட்டி களத்தில் இறங்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக அங்கு வலுவான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யார்? என பட்டியலிட்டு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து அவர் ஈடுபட்டு உள்ளார்.
இருப்பினும் காங்கிரஸ் சார்பில், மேல்-சபை உறுப்பினர் பிரசன்னகுமார், சிகாரிபுரா தாலுகா தலைவர் மால்தேஷ், பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மகாதேவப்பா ஆகியோரில் ஒருவர், சிகாரிபுரா தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றியும் அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள். எது எப்படியாயினும் எடியூரப்பாவிற்கு எதிராக முதல்-மந்திரி சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளரான மேல்-சபை உறுப்பினர் பிரசன்னகுமாருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story