நண்பனின் தாயை கொலை செய்த மாற்றுத்திறனாளி, கூட்டாளிக்கு ஆயுள் தண்டனை மும்பை கோர்ட்டு தீர்ப்பு


நண்பனின் தாயை கொலை செய்த மாற்றுத்திறனாளி, கூட்டாளிக்கு ஆயுள் தண்டனை மும்பை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Jan 2018 3:15 AM IST (Updated: 23 Jan 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

நகை, பணத்துக்காக நண்பனின் தாயை கொலை செய்த மாற்றுத்திறனாளி மற்றும் அவரது கூட்டாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TNnews

மும்பை,

நகை, பணத்துக்காக நண்பனின் தாயை கொலை செய்த மாற்றுத்திறனாளி மற்றும் அவரது கூட்டாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை பாந்திராவில் உள்ள மதுபான் கட்டிடத்தில் வசித்து வந்தவர் நளினி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது கொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாக நளினியின் மகனுடைய நண்பரான மாற்றுத்திறனாளி சாய்பிரசா மற்றும் அவரது கூட்டாளி சர்வேஸ்கானை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணையில் சாய்பிரசா, சர்வேஸ்கான் ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நண்பனின் தாயை கொலை செய்து கொள்ளையடித்த 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Next Story