ஸ்கூட்டரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய இளம்பெண் கைது
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஸ்கூட்டரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவருடைய கணவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி ஸ்கூட்டரில் 2 சாக்கு மூட்டைகளுடன் வாலிபரும், இளம்பெண்ணும் வேகமாக வந்தனர்.
அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கினர். இதை பார்த்ததும் ஸ்கூட்டரில் இருந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவானார். ஸ்கூட்டரை ஓட்டிவந்த இளம்பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதுநகர் வசந்தராயன்பாளையம் சலங்கைநகரை சேர்ந்த அனுசுயா (வயது 24) என்றும், தப்பி ஓடியது அவருடைய கணவர் லெனின்குமார் (27) என்றும் தெரிய வந்தது.
கைது
இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த 2 சாக்குமூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் ஒரு மூட்டையில் 120 லிட்டர் சாராயமும், மற்றொரு மூட்டையில் 100 மதுபாட்டில்களும் இருந்தது தெரிய வந்தது. கணவன், மனைவியும் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி கடலூர் முதுநகரில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 120 லிட்டர் சாராயம், 100 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லெனின்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story