மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி மாணவர் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Jan 2018 4:30 AM IST (Updated: 23 Jan 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகரை அடுத்த இந்திரா நகரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் கண்ணமநாயக்கனூர் வடக்குத்தெருவை சேர்ந்த சரவணக்குமார் (22). இவர் பெத ப்பம்பட்டியில் உள்ள என்.வி. பாலிடெக் னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் உடுமலை அருகே சமத்துவபுரத்தில் வசித்து வந்த விக்னேசின் பாட்டி அம்மாசை (68) என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி இறந்துபோனார். இதையடுத்து சமவத்துவபுரத்தில் நேற்று முன்தினம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விக்னேசும், அவருடைய நண்பர் சரவணக்குமாரும் நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் இந்திரா நகரில் இருந்து சமத்துவபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக் கிளை விக்னேஷ் ஓட்டினார். பின் இருக்கையில் சரவணக்குமார் அமர்ந்து இருந்தார்.

மோட்டார் சைக்கிள் மருள்பட்டி சாலையில் ஒரு தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் தோட்டத்தின் வேலிக்காக அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக் கிளை ஓட்டிச்சென்ற விக்னேசும், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சரவணக்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள், பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். அவர்கள் 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடுமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மாணவர் உள்பட2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story