பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: என்ஜினீயரிங் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆரல்வாய்மொழியில் என்ஜினீயரிங் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஆரல்வாய்மொழி,
தமிழகத்தில் அரசு பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்துடன் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று காலையில் வகுப்புகள் தொடங்கியதும், சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறி னர். தொடர்ந்து, அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அத்துடன் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆரல்வாய்மொழி நோக்கி ஊர்வலமாக நடக்க தொடங்கினர்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் வழியாக மெயின் ரோட்டை அடைந்தனர். தொடர்ந்து, சாலையோரம் வரிசையாக நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால் அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story