பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 4 வாலிபர்கள் கைது
சேலத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 31½ பவுன் நகை, 6 கிலோ வெள்ளி மீட்கப்பட்டன.
சேலம்,
சேலம் அன்னதானப்பட்டியில் கடந்த மாதம் ராணி என்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்று விட்டனர். இதேபோல் கடந்த 6-ந் தேதி சத்யபிரியா என்ற பெண்ணிடம் 2½ பவுன் நகை பறிக்கப்பட்டது. மேலும் சந்தைபேட்டையில் முரளி என்பவர் கடையின் வெளியே நிறுத்திய மோட்டார் சைக்கிளில் இருந்த, 6 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இந்த நகை பறிப்பு மற்றும் வெள்ளி திருட்டு சம்பவங்கள் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அன்னதானப்பட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலும், ஒருவர் ஸ்கூட்டரிலும் வந்தனர். இவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
வாலிபர்கள் கைது
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், அன்னதானப்பட்டி பந்தல்காளிம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்பாஷா (வயது 26), மணியனூர் காந்தாயம்மாள் தெருவை சேர்ந்த விஜயகுமார் (26) என்பதும், ராணி, சத்ய பிரியா ஆகியோரிடம் நகை பறித்ததும், முரளியின் வெள்ளியை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜான்பாஷா, விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 9½ பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் சூரமங்கலம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குகை பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13½ பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
31½ பவுன் நகை மீட்பு
மேலும் அழகாபுரம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தாதகாப்பட்டி திருச்சிமெயின் ரோடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (27) என்பவரை அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதானவரிடம் இருந்து 8½ பவுன் நகை மீட்கப்பட்டது.
சேலத்தில் பல்வேறு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களிடம் இருந்து 31½ பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் மீட்கப்பட்டது. நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை பாராட்டினர்.

Related Tags :
Next Story