கேரளாவில் இன்று பொது வேலை நிறுத்தம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது
கேரளாவில் இன்று பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நேற்று விடுமுறை விடப்பட்டதால் வெறிச்சோடியது. இதனால் ரூ.4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி மார்க்கெட் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த மார்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இங்கு கொண்டு வரப்படும் அதிகப்படியான காய்கறிகள் கேரள மாநிலத்திற்கும், 20 சதவீத காய்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுவது வழக்கம். தினமும் 400 முதல் 500 டன் காய்கறிகள் ஏற்றுமதி ஆகும். சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து இன்று (புதன்கிழமை) பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் லாரி, கார், பஸ், ஆட்டோ போன்ற அனைத்து வாகனங்களும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு காய்கறி வியாபாரம் இருக்காது என்பதால் நேற்று கேரள வியாபாரிகள் யாரும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டுக்கு வரவில்லை.
வெறிச்சோடியது
காலை 6 மணிக்கே சின்னவெங்காயம் வியாபாரம் தொடங்கி இரவு 12 மணி வரை பரபரப்பாக இருக்கும். ஆனால் மார்கெட் நேற்று வெறிச்சோடியது. இன்று மார்க்கெட் இருக்காது என்பது பற்றி நேற்றே கடை வியாபாரிகள் தகவல் கொடுத்து விட்டதால் விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவரவில்லை.
இந்த கடையடைப்பால் கூலி தொழிலாளர்களும், கடை பணியாளர்கள், லாரி, வேன் பணியாளர்கள் என அவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று வேலையிழந்து பாதிப்படைந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.4 கோடி அளவில் வர்த்தகம் பாதிப்படைந்தது.

Related Tags :
Next Story