ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்


ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பெடி தலைமையில் நேற்று நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பெடி தலைமை தாங்கினர். கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், ‘ஒகி‘ புயல் நிவாரணத்தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துதல், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்படும் சிறப்பு வாழ்வாதாரத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், கூட்டுப்பண்ணையத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வடசேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் கன்னியாகுமரி விற்பனைக்குழு செயல்பாடுகளையும் ககன்தீப்சிங் பெடி ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, பத்மனாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story