ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம்


ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம்
x
தினத்தந்தி 25 Jan 2018 3:45 AM IST (Updated: 25 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஆதார் அட்டை அவசியம் என்று அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆதார் அட்டை பெறுவதற்காக தினம் தினம் தாலுகா அலுவலகத்திற்கு முன்னர் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை பெறுவதற்காக அதிகாலை முதற்கொன்டே நீண்ட வரிசையில் பெரியவர்கள் முதல் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் வரை காத்து நிற்கின்றனர். அங்குள்ள அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு வராமல் ஆதார் அட்டை வழங்குவதில் மெத்தனமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆதார் அட்டைக்காக காத்திருப்பவர்கள் அமருவதற்காக இருக்கைகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story