வல்லூர் அனல் மின்நிலைய சாம்பல் கழிவு குளத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


வல்லூர் அனல் மின்நிலைய சாம்பல் கழிவு குளத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 3:30 AM IST (Updated: 25 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

வல்லூர் அனல் மின்நிலைய சாம்பல் கழிவு குளத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி,

வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள சாம்பல் கழிவுகள் அனல் மின்நிலையம் அருகே கொட்டப்படுகிறது. தற்போது சாம்பல் கொட்டும் இடத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக குருவிமேடு பகுதியில் உப்பங்களியையொட்டி அலையாத்தி காடுகள் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு எண்ணூர் மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை எண்ணூர் மீனவ கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் சாம்பல்குளம் அமைக்கும் இடத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி எண்ணூர் முகத்துவாரகுப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் காட்டுக்குப்பம் படகுத்துறையில் இருந்து படகுகளில் வந்தனர். அவர்கள் விரிவாக்கம் செய்யப்படும் சாம்பல் கழிவுகுளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story