திருவள்ளூர் அருகே பெண் வெட்டிக்கொலை, கணவர் தலைமறைவு
திருவள்ளூர் அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கணவர் தலைமறைவாக உள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பீமந்தோப்பை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி (28) . இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நாகராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து திருவள்ளூரை அடுத்த பீமந்தோப்பில் உள்ள தனது தாயார் வீட்டில் தனது மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நந்தினி திருவள்ளூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலையை முடித்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார். அவர் தன்னுடைய வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருளான பகுதியில் இருந்து வெளியே வந்த நாகராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தன்னுடைய மனைவி நந்தினியுடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அவர்களுக்குள் வாய்ப்பேச்சு முற்றவே ஆத்திரம் அடைந்த நாகராஜ், தான் வைத்திருந்த கத்தியால் நந்தினியின் வலது கையில் வெட்டினார். இதில் அவரது வலது கையில் ஒரு பகுதி துண்டானது. மேலும் தலை, கால் என பல இடங்களில் வெட்டி விட்டு நாகராஜ் தலைமறைவாகி விட்டார். இதை பார்த்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிய நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நந்தினி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story