மேற்கு ரெயில்வேயில் தானியங்கி ‘நாப்கின்’ எந்திரங்கள்


மேற்கு ரெயில்வேயில் தானியங்கி ‘நாப்கின்’ எந்திரங்கள்
x
தினத்தந்தி 25 Jan 2018 3:48 AM IST (Updated: 25 Jan 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு ரெயில்வே, பெண் ஊழியர்களின் வசதிக்காக ரெயில்வே அலுவலக பகுதிகளில் தானியங்கி ‘நாப்கின்’ எந்திரங்களை வைத்துள்ளது.

மும்பை,

நேற்று மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் மேற்கு ரெயில்வே பெண் ஊழியர்கள் நலச்சங்க தலைவர் அர்ச்சனா குப்தா இதன் பயன்பாட்டை  தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக மேற்கு ரெயில்வேயின் மும்பை, வதோதரா, ஆமதாபாத், ரட்லம், ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய 6 இடங்களில் தானியங்கி ‘நாப்கின்’ எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு ரெயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ரூபாய் நாணயங்களை போட்டு இந்த எந்திரங்களில் இருந்து ‘நாப்கின்’களை பெறமுடியும்.


Next Story