குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்

மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20 சிவசக்தி நகர் மற்றும் பாத்திமாமலை பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் அவதிக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை.
நகராட்சியின் சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதுவும் ஒரு குடும்பத்திற்கு 2 முதல் 4 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருவதுடன் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்கள் ஏற்கனவே பலமுறை போராட்டத்தில் ஈடுபட்ட போது ஆழ்குழாய் கிணறு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே நகராட்சி அதிகாரிகள் கூறினர்.
ஆனால் இதுவரை ஆழ் குழாய் கிணறு அமைக்கப்படாத நிலையில் அவதிக்குள்ளாகி வந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அவருடன் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வருடத்திற்கு முன்னதாகவே ஆழ்குழாய் கிணறு அமைத்து தருகிறோம் என்று கூறி விட்டு இதுவரை அமைத்து தரவில்லை. அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்றால், பணிகளை ஏன் இன்னும் தொடங்கவில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆழ் குழாய் கிணறு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் மனோகரன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story