ஜோதிடத்தில் மருத்துவம்
முற்காலத்தில் ஒரு வைத்தியருக்கு ஜோதிட நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். அதே போல் ஒரு ஜோதிடருக்கு மருத்துவ குறிப்புகள் தெரிந்திருக்கும்.
அதிவேக விஞ்ஞான யுகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வேகமான உலகத்திற்கு ஏற்றாற்போல் நோய்களும் வித்தியாசமாக இருக்கின்றன; வேகமாக பரவுகின்றன. அதற்கேற்றாற்போல் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. அதிவேகமாக நோயைக் குணப்படுத்தும் ஆங்கில மருந்துகள் அனைத்தும், கெமிக்கல் என்னும் வேதிப்பொருட்களை நம்பியே தயாரிக்கப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்றவாறு மருந்தின் அளவுகள் கணக்கிடப்பட்டு, இயந்திரங்கள் மூலம் அவை தயாராகின்றன.
அன்றைய காலத்தில் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் முறையே வேறாக இருந்தது. இந்த மருந்துகள் அனைத்தும் ஜோதிட விதிமுறைகளை பின்பற்றியே தயாரிக்கப்படும். அமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி, திதி சூன்யம் மற்றும் அன்றைய நாளுக்கான நேத்திர ஜீவன் போன்றவற்றை பார்த்து தான் மருந்துகள் தயாரிக்கப்பட்டன. மருந்துகள் தயாரிக்க மட்டுமல்ல, ஒருவருக்கு மருந்துகளைக் கொடுப்பதற்கும் கூட இதுபோன்ற முறையை ஜோதிட மருத்துவ ரீதியாக வகுத்து வைத்திருந்தனர்.
சித்தர்கள், மருந்துகளைத் தயாரிக்க அவர்களின் உடலுக்குள் எழும் ஒரு வகையான சக்தி 30 சதவீதம் இருக்க வேண்டும். அந்த மூலிகைகளை மருந்து வகைக்கு ஏற்றவாறு தயாரிப்பதற்கான தெளிவு 60 சதவீதம் இருக்க வேண்டும். பிறகு அந்த மருந்தின் வீரியம் 10 சதவீதம் ஒத்துழைக்க வேண்டும். இதே போல அந்த மருந்தை உண்ணும் நோயாளிக்கும் அமைய வேண்டும். இதுபோன்ற கால அளவுகளைக் கொண்டு தான், சித்தர்கள் மருத்துவம் செய்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. எங்கும், எதிலும் வியாபார யுக்தியும், பணம் தேடும் வழியும் தான் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருவரது உடல் எல்லா மருந்துகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று சொல்ல முடியாது. மருந்துகள், அந்த நபரின் உடலில் வீரியத்தோடு செயல்படவில்லை என்றால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். பக்க விளைவுகளால் வேறு நோய்கள் ஏதாவது ஏற்பட்டால், அந்த நோய்க்கும் சேர்த்து மருந்து சாப்பிட வேண்டிய நிலை உருவாகிவிடும். இவை ஆங்கில மருந்துகளுக்கும் பொருந்தும்.
இந்தியாவில் போற்றிப் பாதுகாக்கப்படுவது அதன் பண்பாடு, கலாசாரம் மட்டுமல்ல. நமது பாரம்பரியமான மருத்துவ குறிப்பேடுகளும் தான். மருத்துவத்தில் மருந்து தயாரிக்கவே, கால நேரம் கருத்தில் கொள்ளப்பட்டது என்றால், ஜோதிடம் அதில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். முற்காலத்தில் ஒரு வைத்தியருக்கு ஜோதிட நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். அதே போல் ஒரு ஜோதிடருக்கு மருத்துவ குறிப்புகள் தெரிந்திருக்கும். இன்றைய காலத்தில் அதுபோன்ற வல்லுநர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
ஒருவரது உடலுக்கும், வயதுக்கும் ஏற்ற வகையிலும், நோயின் தன்மைக்கு ஏற்றபடியும் தான் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மருந்து, மாத்திரைகள் போன்றவை திடப்பொருளாகவும், ஊசி மூலம் செலுத்தும் திரவ மருந்தாகவும், ‘சிரப்’ எனப்படும் திரவமாகவும், சூரணம் என்னும் பொடி வகையிலும், லேகியம் எனப்படும் களிம்பு வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.
திட வடிவில் இருக்கும் மாத்திரைகளுக்கு உரியவர் குரு பகவான். ஊசி மூலம் செலுத்தப்படும் திரவ மருந்துக்கும், சிரப் வகைக்கும் உரியவர் சந்திரன். அதே போல் லேகியங்களுக்கு சுக்ரனும், சூரணம், பச்சிலையில் உருவாகும் மருந்துகளுக்கு புதனும் உரியவராக இருக்கிறார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால், அவருக்கு எந்த விதமான நோயும் அண்டாது. அந்த நபர் மருந்துகள் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு சிலர் சாப்பிடுவதற்கு முன் உணவு போல் மாத்திரைகளை தின்று விட்டு, சாப்பிட்ட பிறகும் அதே அளவு மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
சித்தா, ஆயுர்வேதத்தில் உள்ள மருந்துகள் அனைத்தும் உடலின் நாடி பேதத்தில் நாடித் தன்மைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. இவ்வகை மருந்துகள் நோய்களைப் போக்க சில காலம் எடுத்துக் கொண்டாலும், அந்த நோயை முற்றிலுமாக போக்கும் சக்தி பெற்றவை. சித்தாவில் நமது உடலை, முதுமையில் இருந்து இளமைக்கு திருப்பக்கூடிய சக்தி படைத்த மருந்துகள் உள்ளன.
ஜோதிட சாஸ்திரத்தில் மனிதனின் சராசரி ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. ஆனால் சித்தர்கள் அதையும் தாண்டி வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு மரணத்தை மாற்றும் மூலிகைகளை நமக்குத் தந்திருக்கும், இயற்கையின் அருள்கொடையே காரணமாகும்.
அடுத்த வாரம் வைத்திய முறைகளின் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
–ஆர்.சூரியநாராயணமூர்த்தி.

Related Tags :
Next Story