டி.வி. அறிமுகமான நாள் இன்று!


டி.வி. அறிமுகமான நாள் இன்று!
x
தினத்தந்தி 25 Jan 2018 3:36 PM IST (Updated: 25 Jan 2018 3:36 PM IST)
t-max-icont-min-icon

உலகில் முதன் முதலில் டி.வி. என்ற சாதனம் 1926–ம் ஆண்டு இதே நாளில் (ஜனவரி 26) தான் அறிமுகம் செய்யப்பட்டது.

டி.வி.யை கண்டுபிடித்த ஜான் பியர்டு, லண்டன் நகரில் அதை பொதுமக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்டினார்.

டி.வி.இன்று பல தலைமுறை வளர்ச்சியைக் கண்டு, எல்.இ.டி., எல்.சி.டி. தொழில்நுட்பத்தில் மையம் கொண்டிருக்கிறது. செல்போன்கள் கைகளோடு ஒட்டிக் கொண்ட பின்னாலும் மனதை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறது டி.வி.. அத்தகைய அறிவியல் சாதனமான டி.வி. பற்றிய சில சுவையான தகவல்கள்...

* பியர்டு டி.வி.யை ஜனவரி 26–ல் அறிமுகம் செய்தாலும், 1925–ம் ஆண்டு அக்டோர் 2–ம் தேதியே அதில் படம் ஒளிபரப்ப முடியும் என்பதை அறிந்துவிட்டார். அதிலிருந்த சிரமங்களை களைந்து ஒளிபரப்பை சாத்தியமாக்க 3 மாத இடைவெளி தேவையாகிவிட்டது.

* டி.வி. இங்கிலாந்தில் அறிமுகமானாலும், உலகின் முதல் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி ஒளிபரப்பு அமெரிக்காவில்தான் நடந்தது. அமெரிக்கன் டெலிவி‌ஷன் ஸ்டேசன் என்ற ஒளிபரப்பு நிறுவனம் 1928–ம் ஆண்டு முதல் ஒளிபரப்பை தொடங்கியது. இங்கிலாந்தின் பி.பி.சி. நிறுவனம் 1930 முதல் ஒளிபரப்பை தொடங்கியது.

* நியூயார்க் நகரில் 1941–ம் ஆண்டு ஜூலை 1 அன்று முதன் முதலில் டி.வி.யில் விளம்பரம் ஒளிபரப்பானது. அது ஒரு வாட்ச் விளம்பரம். வர்த்தக ரீதியில் டி.வியில் ஒளிபரப்பப்பட்ட முதல் விளைய£ட்டுப் போட்டி, பிலடெல்பியா– புருக்ளின் இடையே நடந்த கைப்பந்து போட்டியாகும்.

* டி.வி. ஒளிபரப்பு தொடங்கிய சில ஆண்டு களிலேயே டி.வி. கார்களிலும் இடம் பெறத் தொடங்கியது. 1946–ம் ஆண்டு ஜூன் 9 அன்று அமெரிக்காவில் காருடன் இணைந்த டெலிவி‌ஷன் ஒளிபரப்பு சாத்தியமானது.

* அமெரிக்காவில் டி.வி.க்காக தயாரித்து ஒளிபரப்பப்பட்ட முதல் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி ‘த டெலிவி‌ஷன் கோஸ்ட்’ என்பதாகும். இறந்த மனிதர்கள் தாங்கள் கொல்லப்பட்ட கதையை சொல்வதுபோல உருவாக்கப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி 1931–ல் ஒளிபரப்பப்பட்டது.

*  ‘டாப் கியர்’ எனப்படும் இங்கிலாந்து டி.வி. நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட டி.வி. நிகழ்ச்சி என்ற சாதனை படைத்தது. 170 நாடுகளில், வாரத்திற்கு 35 கோடி பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்களாம்.

* அமெரிக்க அதிபர் கென்னடி கொல்லப்பட்டபோது (1963) அவரது இறுதி ஊர்வலம் மற்றும் நிகழ்வுகள் 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஒளிபரப்பானது. அப்போது விளம்பரங்கள் ஏதும் இடம் பெறவில்லை. 93 சதவீத அமெரிக்கர்கள்

* டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தார்களாம்.

* கேபிள் டி.வி.கள் 1952–ம் ஆண்டு கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அது வேகமாகப் பரவ வெகு காலம் பிடித்தது.

* ஒரு மனிதன், சராசரியாக தன் வாழ் நாளில் 10 ஆண்டுகளை டி.வி. பார்க்க செலவிடுவதாக ஒரு புள்ளிவிவர கணிப்பு கூறுகிறது.

* அமெரிக்காவில் 98 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் டி.வி. வைத்துள்ளனர். அதில் 76 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட டி.வி.களை வைத்திருக்கின்றனராம்.

Next Story