பாளையங்கோட்டையில் குடியரசு தின விழா கலெக்டர் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்


பாளையங்கோட்டையில் குடியரசு தின விழா கலெக்டர் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:30 AM IST (Updated: 25 Jan 2018 7:04 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் இன்று தேசிய கொடியேற்றுகிறார்.

நெல்லை,

குடியரசு தின விழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் இன்று தேசிய கொடியேற்றுகிறார்.

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றுகிறார்.

தொடர்ந்து காவல்துறை, ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. அதை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏற்றுகொள்கிறார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஒத்திகை நிகழ்ச்சி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த சில நாட்களாக போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நேற்று நடந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தலைமை தாங்கினார். குடியரசு தினவிழாவையொட்டி வ.உ.சி.மைதானத்தை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர். குடியரசு தினவிழாவையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story