கோவில்பட்டியில் போர் நினைவு சின்னம் அமைக்க பூமி பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் போர் நினைவு சின்னம் அமைக்க பூமி பூஜையை செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் போர் நினைவு சின்னம் அமைக்க பூமி பூஜையை செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
போர் நினைவு சின்னம்
கோவில்பட்டி– புது ரோடு, எட்டயபுரம் ரோடு சந்திப்பில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவி மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று காலையில் நடந்தது. முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமச்சந்திரன், கர்னல் ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, போர் நினைவு சின்னம் அமைக்க பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் வசித்து வருகின்றனர். ஜெயலலிதா முதல்– அமைச்சராக இருந்தபோது, கோவில்பட்டியில் ராணுவ வீரர்களின் நலனுக்காக ராணுவ கேண்டீனை திறக்க ஏற்பாடு செய்தார். விரைவில் இங்கு ராணுவ ஆஸ்பத்திரி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
தோரணவாயில் அமைக்க...
பின்னர் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி பாலாஜி ரேணுகாதேவி ஆலயத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் தோரணவாயில் அமைக்க பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்ராஜ், வக்கீல் ராமசுப்பு, அலங்கார பாண்டியன், பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் முதல்– அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, ரெட்டி நலச்சங்கத்தினர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சென்று, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்தனர்.
சங்க மாநில பொருளாளர் செல்வகுமார், கோவில்பட்டி ரெட்டி நலச்சங்க தலைவர் கேசவன், முன்னாள் செயலாளர் சண்முகம், வக்கீல் சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.