தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு அதிகரிப்பு கடற்கரையில் அன்னியர் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு
குடியரசு தினத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடலோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
குடியரசு தினத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடலோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடற்கரையில் அன்னியர் நடமாட்டம் உள்ளதா? எனவும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு
குடியரசு தினத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையில், 2 நாட்கள் தொடர் கண்காணிப்பு பணி நடக்கிறது. கடற்கரை கிராமங்களில் மக்களை போலீசார் சந்தித்து சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். கடற்கரையில் அன்னியர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
கடற்கரையோர சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். மீன்பிடி படகுகளையும் போலீசார் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர். கடற்கரையோர பாதுகாப்பு போலீஸ் குழுமத்தில் உள்ள ரோந்து படகுகள் பழுதடைந்து உள்ளன. இதனால் கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
1,500 போலீசார்
இதே போன்று மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ரெயில் தண்டவாளம் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story