தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்–மனித சங்கிலி


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்–மனித சங்கிலி
x
தினத்தந்தி 26 Jan 2018 2:30 AM IST (Updated: 25 Jan 2018 8:21 PM IST)
t-max-icont-min-icon

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி நடந்தது.

கோவில்பட்டி,

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி நடந்தது.

கோவில்பட்டி


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 51, 52, 180 சார்பில், அங்குள்ள அண்ணா பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் சாலையோரம் கைகோர்த்து அணிவகுத்து மனித சங்கிலியாக நின்றனர். இதில், மேற்கு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் அங்குத்தாய், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்

இதேபோன்று, எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், அங்குள்ள பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலியாக நின்றனர். தாசில்தார் சூர்யகலா, துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கவிதா, கிராம நிர்வாக உதவியாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவர்கள், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி கோ‌ஷங்களை எழுப்பியவாறு, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பள்ளிக்கூடத்தை சென்றடைந்தனர்.

கயத்தாறு

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகானந்தம் தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story