புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 3:45 AM IST (Updated: 26 Jan 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை பேரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பஸ்நிலையம் முன்பு தற்போது அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். டீசல்-பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மணல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

விண்ணை தொட்டு விட்ட பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவர் அறிவு ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து திடீரென்று பஸ்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் செய்த ஐந்து பெண்கள் உள்பட 80 போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு தாலுகா பொது தொழிலாளர்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாண்டி மாவட்ட தலைவர் காளிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முத்துராஜ், ஹார்விப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொழிற்சங்க கொடியுடன் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது ஒருவர் தண்டவாள பகுதிக்கு சென்று கோஷமிடார். அதைத்தொடர்ந்து அவரை அப்புறப்படுத்தி போலீசார் ரெயில் மறியலுக்கு செல்ல முயன்றவர்களை கைது செய்தனர். 

Next Story