உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி உடல்நலக்குறைவால் மரணம்
திருப்பூர் மாவட்ட முதன்மை பெண் நீதிபதி அலமேலு நடராஜன், உடல்நலக்குறைவினால் கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தார்.
கோவை,
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் அலமேலு நடராஜன் (வயது56). இவர் நிமோனியா வைரசினால் பாதிக்கப்பட்டு நுரையீரல் கோளாறினால் கோவையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை 11.37 மணிக்கு நீதிபதி அலமேலு நடராஜன் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கோவை, திருப்பூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அலமேலு நடராஜனின் உடல் பகல் 2.40 மணிக்கு சென்னைக்கு வேனில் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அண்ணா நகர், கிரீன் பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் உடல் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பின்னர், இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
மரணம் அடைந்த நீதிபதி அலமேலு நடராஜன், பல்வேறு வழக்குகளில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர்.
தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை நீதிபதி அலமேலு நடராஜன் விசாரணை நடத்தினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு 3 ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு கூறினார். கொலை சம்பவம் நடந்த 1 ஆண்டு 9 மாதங்களில் இந்த வழக்கில் விசாரணை நடத்தி முடித்து சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை அவர் வழங்கினார். இந்த தீர்ப்பு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
அலமேலு நடராஜன், திருச்சியில் சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.காம் படித்து முடித்தார். அதன்பிறகு திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
இவர் கடந்த 1991-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு கோவை, வேலூரில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். அலமேலு நடராஜனின் சொந்த ஊர் கோவை போத்தனூர் ஆகும். இவருடைய கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
நீதிபதி அலமேலு நடராஜன் மரணம் அடைந்த சம்பவத்தை அறிந்ததும் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மற்றும் தாலுகா கோர்ட்டுகளில் உள்ள வக்கீல்கள், ஊழியர்கள் கோவைக்கு சென்று நீதிபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதன்காரணமாக நேற்று திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் நீதிபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட்டு வளாகத்தில் நீதிபதியின் உருவ படத்துக்கு வக்கீல்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். வக்கீல்கள் அனைவரும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

Related Tags :
Next Story