அரசு பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவினாசியில் 800 கடைகள் அடைப்பு
அரசு பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஸ் கட்டண உயர்வை உடனே திரும்பபெறக்கோரியும் அவினாசியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
அவினாசி,
தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திடீரென்று உயர்த்தியது. இந்த கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், கூலித்தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் தினசரி வருமானத்தில் பெரும்பாலான தொகையை பஸ் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளதாக தொழிலாளர்கள் புலம்புகிறார்கள்.
இந்த பஸ் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பு மக்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று, அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 25-ந் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமூக நல அமைப்புகள் சார்பில் அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அவினாசியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக அவினாசி பிரதான சாலையில் உள்ள கடைகள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், ஓட்டல்கள், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்கள், நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்தது. அதன்படி அவினாசி மற்றும் ஆட்டையாம்பாளையத்தில் மொத்தம் 800 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பொதுவாக அவினாசியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவினாசிக்கு வந்து வாங்கிச்செல்வார்கள். அவினாசியில் அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டு இருந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காய்கறி மார்க்கெட்டும் அடைக்கப்பட்டு இருந்ததால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் இந்த கடையடைப்பு பற்றி தெரியாமல் கிராமங்களில் இருந்து அவினாசிக்கு வந்த பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சென்றனர். நகை வாங்க வந்தவர்களும், துணி எடுக்க வந்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர். பேக்கரி திறக்கப்படாததால் டீ பிரியர்கள், டீ குடிக்க முடியாமல் தவித்தனர். மதிய நேரம் ஓட்டலை நம்பி உள்ள தொழிலாளர்கள் சாப்பாடு கிடைக்காமல் திணறினார்கள். ஆனால் வழக்கம் போல் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் இயங்கின.
இந்த கடையடைப்பு போராட்டம் குறித்து அவினாசி ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் செந்தில்குமார் கூறும்போது “ பஸ் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதால் சிறுதொழில் செய்பவர்கள், தினமும் பஸ்சில் சென்று வரும் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும். இந்த கடையடைப்பால் அவினாசியில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Related Tags :
Next Story