நேரல்– மாதேரான் இடையே டாய் ரெயில் சேவை முதல்–மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்
நேரல்– மாதேரான் இடையே டாய் ரெயில் சேவையை முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைக்கிறார்.
மும்பை,
இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) நேரல்– மாதேரான் இடையே டாய் ரெயில்சேவை தொடங்கப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலையத்தில் நடைபெறும் விழாவில் முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டாய் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதுதவிர கிங்சர்க்கிள் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய டிக்கெட் மையம், டிட்வாலா, கோவண்டியில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால மருத்துவ அறை, எல்.டி.டி., தானே, நேரல், திலக்நகர், சாந்தாகுருஸ் ரெயில்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நடைமேம்பாலங்களை முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைக்கிறார்.மேலும் தாதர், தானேயில் நகரும் படிக்கட்டுகள், தாதர், மான்கூர்டு, ரே ரோடு, போரிவிலியில் ‘லிப்ட்’ வசதி மற்றும் வடலாரோடு, பத்லாப்பூர் ரெயில்நிலையத்தில் இலவச வை–பை சேவையையும் தொடங்கி வைக்கிறார்.
Related Tags :
Next Story