அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சட்டத்தை தவறாக பயன்படுத்தி மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்த மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கணக்கில் கூடுதலாக தொகை செலுத்தியதாகவும், அந்த தொகையை பிடித்தம் செய்யப்போவதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் சிலரின் கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து போக்குவரத்துக்கழகம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. ஆனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்றொரு வழக்கில் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர். பொதுமக்களின் பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது என்று கருத்து தெரிவித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து விளக்கம் அளிக்க மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆஜராக உத்தரவிட்டது.
ஆனால் கடந்த 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணையின்போது போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் டி.வி.இளங்கோவன் ஆஜராகி, ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், “போக்குவரத்துக்கழகங்கள் தொடர்பாக கோர்ட்டுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அவற்றை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தேவையில்லாமல் கோர்ட்டுக்கு அடிக்கடி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் பணமும், ஊழியர்களின் பணி நேரமும் வீணாகிறது. மேல்முறையீட்டு வழக்குகளுக்காக அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டு வரை செல்கின்றனர். இதற்காக அவர்கள் சொகுசு பயணம் மேற்கொள்கிறார்கள். பல்வேறு கோர்ட்டுகளில் போக்குவரத்துக்கழகங்கள் 7,500 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்காக அரசு பணத்தை அதிகாரிகள் வீணாக செலவு செய்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளும் அதிகாரிகள், போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்கின்றனர். இவை அனைத்துமே தவறு. ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று போராடுகின்றனர். சம்பளத்தை உயர்த்திவிட்டு, பஸ் கட்டணத்தை அதிகரித்தால் அதே நபர்கள் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சட்டத்தை தவறாக பயன்படுத்தி தேவையில்லாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை டெல்லியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்டு விதவையானவர்கள் சங்கத்துக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களிடம் பிடித்தம் செய்த தொகையை 8 வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story