நாகர்கோவிலில் ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்
நாகர்கோவிலில் ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ஒகி புயலால் ஏராளமான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். பல மீனவர்கள் உயிரிழந்தனர். இன்னும் பலரது கதி என்னவென்று தெரியவில்லை. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் மீண்டெழும் குமரி திட்டம் என்ற இயக்கம் களம் இறங்கியுள்ளது.
இந்த இயக்கத்தின் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு, சேத மதிப்பு மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பான கருத்தரங்கம் நாகர்கோவிலில் உள்ள ஹோலிகிராஸ் கல்லூரி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரிகளில் நடந்தது.
மாரத்தான் ஓட்டம்
நிறைவு நாளான நேற்று காலை மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஒற்றுமை-தோழமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடந்தது. நாகர்கோவில் ராமன்புதூர் சிறுமலர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் செட்டிகுளம் வரை சென்று மீண்டும் அதே பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மீண்டெழும் குமரி திட்ட தலைவர் தாமஸ் பிராங்கோ, அருட்பணியாளர் ஜெகத்கஸ்பார் ராஜ், கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய பங்குத்தந்தை பேட்ரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாரத்தானில் பள்ளி, கல்லுரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர் நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் ‘மேற்கு மலை அழிவு நம் எதிர்காலத்தின் அழிவு’ என்ற தலைப்பில் ஓசை காளிதாஸ் சிறப்புரையாற்றினார். பின்னர் குமரித்தமிழ் வீரம் மற்றும் தனியொருவன் உயர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி ஹிலாரியுஸ் தலைமை தாங்கினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், தாமஸ் பிராங்கோ, பாஸ்கர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விருது
இதில் குமரித்தமிழ் வீரம் உயர் விருது ஒகி புயலின்போது சக மீனவர்களை கடலில் சென்று தேடி மீட்ட 10 மீனவர்களுக்கும், தனியொருவன் உயர் விருது இயற்கை ஆர்வலர் லால்மோகனுக்கும் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story