பெண்ணை தாக்கி நகையை பறித்த வாலிபர் கைது
முன்னாள் காதலி என நினைத்து வேறு ஒரு பெண்ணை தாக்கி நகையை பறித்த வாலிபர் கைது. காதலி நினைவாக அந்த நகையை பிரேம் போட்டு சுவரில் மாட்டியிருந்தார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் குணசுந்தரி. சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த இவரை மர்மநபர் ஒருவர் கல்லால் தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை பறித்துச் சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த குணசுந்தரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. நகையை கொள்ளையடித்ததாக ஜான்சன்(வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த இவர் இரும்பு கம்பெனி ஒன்றில் வேலைபார்க்கிறார்.
இதுதொடர்பாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவர் கூறியிருப்பதாவது:-
சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் நான் சில மாதங்கள் தங்கியிருந்தேன். அப்போது அங்கு வசித்த ஒரு இளம்பெண்ணை காதலித்தேன். ஆனால் அந்த பெண் என்னை ஏமாற்றிவிட்டு வேறோருவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் எனது காதலியை பழிவாங்குவதற்காக நான் அங்கு சென்றேன்.
அப்போது எனது காதலி என்று நினைத்து இரவில் ஒரு பெண்ணை (குணசுந்தரியை) தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளையும் பறித்து வந்துவிட்டேன். காதலியின் நினைவாக அந்த நகையை பிரேம் போட்டு சுவரில் பத்திரமாக மாட்டி வைத்திருந்தேன். இப்போது தான் அந்த பெண் எனது காதலி இல்லை என தெரிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜான்சனிடம் இருந்த 11 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Related Tags :
Next Story