மண்டியாவில் பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை


மண்டியாவில் பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2018 5:24 AM IST (Updated: 26 Jan 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவை சேர்ந்தவள் ஜைபுனீசா (வயது 13). இவள் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுன் ஜெயநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 8–ம் வகுப்பு படித்து வந்தாள்.

மண்டியா,

ஜைபுனீசா விடுதியில் தனது அறையில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். அவள் எதற்காக தற்கொலை செய்து கொண்டாள் என்பது தெரியவில்லை.

இதேபோல, மண்டியா டவுன் சுவர்ணசந்திரா பகுதியை சேர்ந்தவர் ஹம்சா அர்ஸ் (வயது 32). இவருடைய கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தான் ஹம்சாவின் கணவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பி சென்றார். ஹம்சா, அந்தப்பகுதியில் நடன வகுப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹம்சா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக கே.ஆர்.பேட்டை டவுன், மண்டியா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story