சேலத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி தம்பதி உள்பட 3 பேர் பலி
சேலத்தில் சாமி கும்பிட சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி தம்பதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது27), டெம்போ டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாபேட்டை பெரியார் நகரை சேர்ந்த பிரேமா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் ஸ்ரீதர் என்ற மகன் உள்ளான்.
நாகராஜின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிவா, பீரோ பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த சுகன்யா(23) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் வீட்டுக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வரும் அவருடைய அக்காள் கோமதி தனது குடும்பத்தினருடன் விருந்துக்கு வந்தார்.
இந்த நிலையில் பிரேமாவின் குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுகன்யா உள்பட 12 பேர் நேற்று மதியம் சாமி கும்பிடுவதற்காக உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் கோவிலுக்கு நடந்து சென்றனர். அங்கு சென்ற அவர்கள் நாகராஜை போன் மூலம் அழைத்தனர். அதன்படி அவரும் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் சாமி கும்பிடுவதற்கு முன்பு குளிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் கோவிலுக்கு பின்புற பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கல்குவாரி குட்டைக்கு குளிக்கச்சென்றனர். கோமதி, அவருடைய கணவர் கோபி உள்பட சிலர் குட்டையில் ஓரமான பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். இதில் நாகராஜ், பிரேமா, சுகன்யா ஆகியோர் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வெளியே நின்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் நாகராஜ், பிரேமா, சுகன்யா ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் அன்பு, கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் குட்டையில் மூழ்கி இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. குறிப்பாக பிரேமா காதல் திருமணம் செய்து கொண்டது அவருடைய குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவரிடம் எந்த தொடர்பு வைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று பிரேமா இறந்ததை அறிந்து விரைந்து வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பிரேமாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story