தாய்லாந்தில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 75 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 75 நட்சத்திர ஆமைகளை திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்துக்கு சவுதிஅரேபியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, துபாய் உள்பட பல நாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர்-ஏசியா விமானம் திருச்சி வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் மத்திய வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஜாகீர்உசேன் என்ற பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்தனர். அதில் பிளாஸ்டிக் டப்பாக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த டப்பாக்களை திறந்து பார்த்தபோது, அவற்றில் 75 நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆமைகள் அனைத்தும் உயிருடன் இருந்தன. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஜாகீர்உசேனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story