மெட்ரோ ரெயில் பணி: 20 அடி நீளத்துக்கு ‘திடீர்’ மண் சரிவு
மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னை அண்ணா சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் அருகே 20 அடி நீளத்துக்கு திடீர் மண் சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து சைதாப்பேட்டை வரையிலும் சுரங்க மெட்ரோ ரெயிலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணியின்போது, சாலையில் பள்ளங்கள் ஏற்படுவதும், விரிசல் விழுவதும், சிமெண்டு கலவைகள் நுரை பொங்குவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தேனாம்பேட்டை ரிசர்வ் வங்கி அலுவலக கல்லூரி எதிரே உள்ள அண்ணா சாலையில் நேற்று மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சாலையோரம் ராட்சத காங்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், தோண்டப்பட்ட பள்ளம் அருகே திடீரென சுமார் 20 அடி நீளத்துக்கு மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத காங்கிரீட் தடுப்புகள் உள்நோக்கி சரிந்து விழுந்தன.
இதையடுத்து பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு கருதி மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதுகுறித்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறு மயிலாப்பூர் தாசில்தாருக்கு, கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில், தாசில்தார் ஆனந்த மகாராஜன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.
மெட்ரோ ரெயில் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்பி, சரிசெய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாதுகாப்பு கருதி அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஜெமினி பாலம் வரையிலான அண்ணா சாலையில் ஒரு வழிச்சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை, நந்தனத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக சென்டிரலுக்கு சென்ற வாகனங்கள் விஜயராகவா சாலை, வடக்கு போக்கு சாலை, ஜி.என்.செட்டி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோல மறுமார்க்கமாக அண்ணாசாலையில் எந்த தடையும் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன.
அண்ணா சாலையில் சாலை பெயர்ந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளம் தோண்டிய இடத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தடுப்புகள் பாரம் தாங்க முடியாமல் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story