அரசு நிலத்தை மீட்கக்கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
அரசு நிலத்தை மீட்கக்கோரி கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
பூந்தமல்லி,
குடியரசு தினத்தையொட்டி பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான 89 சென்ட் நிலம் உள்ளது. அதனை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்த இடத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமையில் பொதுமக்கள் புறக்கணித்து விட்டு வெளியேறினார்கள்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:- இந்த பகுதியில் விவசாயம் நடைபெற்று வந்தபோது அந்த பகுதி நெற்களமாக இருந்து வந்தது. தற்போது அதிக அளவு விவசாயம் இல்லாததால் 89 சென்ட் நிலம் அப்படியே உள்ளது. இதனை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
தற்போது கிராமசபை கூட்டத்திலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கபட்டது ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story