நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், டி.கே.ரங்கராஜன் எம்.பி பேட்டி


நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், டி.கே.ரங்கராஜன் எம்.பி பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2018 3:15 AM IST (Updated: 27 Jan 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கோவையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேட்டியின் போது கூறினார்.

கோவை,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாக அந்த மாநில உளவுத்துறை முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார், குஜராத் திரைக்கு பின்னால் என்கிற புத்தகம் எழுதினார். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகி மணி தலைமை தாங்கினார். டி.கே.ரங்கராஜன் எம்.பி. புத்தகத்தை வெளியிட, முன்னாள் மேயர் வி.கோபாலகிருஷ்ணன் அதனை பெற்றுக்கொண்டார். இதில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மு.வேலாயுதம், புத்தகத்தை எழுதிய முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சரியானது அல்ல. வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என்பதால் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

தமிழகக்தில் இந்துத்துவாவிற்கு எதிராக பேசுகிறவர்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினரால் மிரட்டப்படுகின்றனர். மேலும் இங்கு இந்துத்துவாவை பரப்பவே கவிஞர் வைரமுத்து பிரச்சினை பெரிதாக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story