திடீரென உடல்நலக்குறைவு மடாதிபதி சிவக்குமாரசுவாமிக்கு அறுவை சிகிச்சை
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மடாதிபதி சிவக்குமாரசுவாமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பெங்களூரு,
துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவக்குமாரசுவாமி. 110 வயதாகும் அவர் கர்நாடக மக்களால் நடமாடும் கடவுள் என்றே அழைக்கப்படுகிறார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரு பி.ஜி.எஸ். குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. கடந்த முறை அவருக்கு ரத்த நாளத்தில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ரத்த நாளத்தில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் ரத்த நாளத்தில் புதிய ‘ஸ்டெண்ட்‘ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சை சுமார் 30 நிமிடங்கள் நடத்தப்பட்டது.
அவருக்கு செயற்கை சுவாச கருவியை பொருத்தி தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சென்று அவருடைய உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் சித்தராமையா வாழ்த்தினார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு டாக்டர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சிவக்குமாரசுவாமிக்கு ரத்த நாளத்தில் ஏற்கனவே 5 ‘ஸ்டெண்ட்‘ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயினும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டது. நாங்கள் தற்போது அறுவை சிகிச்சை செய்து, புதிதாக மேலும் 3 ‘ஸ்டெண்ட்‘ கருவிகளை பொருத்தி இருக்கிறோம். இதனால் அடைப்பு நீங்கியது. மேலும் அவருக்கு நிமோனியா காய்ச்சலும் உள்ளது. அதற்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார். நன்றாக பேசுகிறார்“ என்றனர்.
சிவக்குமாரசுவாமி உடல் நிலை முழுமையாக குணம் அடைந்து மடத்திற்கு திரும்ப வேண்டும் என்று அவருடைய பக்தர்கள் பூஜை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story