கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரியாக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு
கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரியாக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. அந்த கருத்துக்கணிப்பில் எடியூரப்பாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 3 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் பம்பரமாய் சுழன்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் ஒவ்வொரு கட்சியினரும் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று கர்நாடக தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு கடந்த 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் நடந்தது. மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், தற்போதைய அரசின் செயல்பாடு எப்படி?, யாரை அடுத்த முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பீர்கள்?, எந்த பிரச்சினையை மனதில் வைத்து வாக்களிப்பீர்கள்?, எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? ஆகிய 4 கேள்விகள் பொதுமக்கள் முன்பு எழுப்பப்பட்டன. லோக்நிதியின் வழிக்காட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவு பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக அரசின் செயல்பாடு மனநிறைவை தரவில்லை என பெங்களூருவில் 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், கிராமப்புறம் மற்றும் சிறுநகரங்களில் கர்நாடக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் தென்கர்நாடகம், மராட்டிய-கர்நாடகம், ஐதராபாத்-கர்நாடகம் ஆகிய பகுதி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரிடம் கர்நாடக அரசு நற்பெயரை பெற்றுள்ளது.
பெயர்களை குறிப்பிடாமல் அடுத்த முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்வீர்கள்? என்ற கேள்விக்கு சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்த அவர் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புகழ்பெற்றவராக உள்ளார். 2-வது இடம் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கும், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே 4-வது இடத்தில் உள்ளார்.
சதவீத அடிப்படையில் பார்க்கும்போது அடுத்த முதல்-மந்திரியாக, தற்போதைய முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு 34 சதவீதமும், குமாரசாமிக்கு 19 சதவீதமும், எடியூரப்பாவுக்கு 14 சதவீதமும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 10 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவால் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story