பசித்துப் புசியுங்கள்!


பசித்துப் புசியுங்கள்!
x
தினத்தந்தி 27 Jan 2018 1:17 PM IST (Updated: 27 Jan 2018 1:17 PM IST)
t-max-icont-min-icon

நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு உட்கொண்டாலும், பசி பற்றிய பல விஷயங்களை அறியாமல்தான் இருக்கிறோம்.

சிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில் வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.

அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாகச் செரிமானமாகி சத்துகளை உடலால் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது. எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவதை விட, பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவதே நல்லது.

எப்போது நமக்குப் பசி வந்து, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போதே செரிமானத்துக்கான பணிகள் ஆரம்பித்து விடும். அதாவது, என்ன சாப்பிடப் போகிறோம் என்று திட்டமிடுவதில் தொடங்கி, அந்த உணவைப் பார்ப்பது, முகர்வது, சுவைப்பது என உணவு வயிற்றுக்குள்போகும் முன்பே அந்த உணவின் தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கு உடல் தயாராகிவிடும்.

உடல் அமைப்புக்கும் உணவின் அளவுக்கும் சம்பந்தமில்லை. ஒருவர், தொடர்ச்சியாக அதிகம் சாப்பிட்டுவந்தால், நாளடைவில் இரைப்பையின் அளவு தானாகப் பெரிதாகிவிடும். அதற்கேற்றாற்போல் பசியும் உணவின் அளவும் அதிகரித்துவிடும்.

தூக்கத்துக்கும் உண்ணும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. போதுமான அளவு தூங்காதவர்கள் அதிகமாகச் சாப்பிடுவார்கள். எனவே, போதுமான அளவு தூங்குவதை வழக்கமாக வைத்திருங்கள். அப்போது உங்களை அறியாமலேயே நீங்கள் சரியான அளவில் உண்ணத் தொடங்கிவிடுவீர்கள்.

முக்கால் வயிறு நிறைந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். எப்போதும் வயிறு முட்ட உண்பதுதான் திருப்தி என்று எண்ணாதீர்கள். சுவையான உணவு என்பதற்காக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இவையெல்லாம் உடல் பருமனாவதில் இருந்து தப்ப உங்களுக்கு உதவும். 

Next Story