பூமியில் பூக்கள் நிறைந்தது எப்படி?
எங்கும் வண்ணவண்ணமாய் நிறைந்து, இந்தப் பூமியையே ‘பூ’ உலகாய் மாற்றியிருக்கின்றன பூக்கள்.
பூக்கள் எப்படித் தோன்றின? பூக்கும் தாவரங்கள் பூமி முழுவதும் எவ்வாறு பரவின?
இக்கேள்விகள் மிக எளிமையாகத் தோன்றினாலும், பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய டார்வினையே குழம்ப வைத்தவை இவை.
இந்நிலையில், இந்தக் கேள்விகளுக்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
பூப் பூக்கும் தன்மை உடைய தாவரங்களின் அளவு, உலகில் உள்ள தாவர வகைகளில் 90 சதவீதம். பெரும்பாலான உணவுப் பொருட்களை வழங்கும் தாவரங்களும் இதில் அடக்கம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, முள்செடிகளை மிஞ்சி உலகெங்கும் பூக்கும் தாவரங்கள் வேகமாகப் பரவின. ஆனால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது அவிழ்க்கப்படாத புதிராகவே இருந்தது.
ஜீனோம் எனப்படும் மரபணுத் தொகைகளை உருவத்தில் சிறியதாக சுருக்கிக்கொண்டதன் மூலமே பூக்கும் தாவரங்கள் உலகெங்கும் வேகமாகப் பரவின என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.
“உயிரணுவின் உருவ அளவை குறைத்தாலும் வாழத் தேவையான குணாதிசயங்களை எப்படி அதில் அடக்கி இருக்க முடியும் எனும் கேள்வி எழுகிறது” என்கிறார், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஸ்டேட் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த கெவின் சிமினோன்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆக்கிரமித்திருந்தவை முள்செடிகளும், ஊசி யிலைத் தாவரங்களாலும்தான். சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூப் பூக்கும் தாவரங்கள் முதன்முதலாய் தோன்றின.
அவை வேகமாகப் பரவி, ஒரே பச்சை நிறமாக இருந்த பூமிக்கு பல்வேறு நிறங்களைத் தந்தன. அத்தாவரங்கள் வெற்றிகரமாக வேகமாகப் பரவியதற்கான காரணம் பற்றி சில நூற்றாண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வந்தது. சார்லஸ் டார்வின் அதை ‘வெறுக்கத்தக்க புதிர்’ என்றும் கூறினார்.
இதற்கிடையில், சிமினோன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளரான ஏல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆடம் ரோடி, தாவரங்களின் மரபணுத் தொகையின் உருவ அளவுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று நினைத்தனர். அவர்கள் பலநூறு தாவரங்களின் மரபணுக்களின் உருவ அளவை ஆய்வு செய்தனர்.
மரபணுத்தொகையின் உருவ அளவையும் தாவரங்களின் உடல் கூற்றையும் அவர்கள் ஒப்பிட்டனர். அப்போது மரபணுத்தொகையின் உருவ அளவை தாவரங்கள் சிறிதாக்கிக் கொண்டதற்கும், பூக்கும் தாவரங்கள் வேகமாக உலகில் பரவியதற்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
உயிரணுக்களின் கருவில் உள்ள மரபணுத்தொகையின் அளவைச் சுருக்கியதன் மூலம் பூக்கும் தாவரங்களால் சிறிய உயிரணுக்களை உருவாக்க முடிந்தது. இது பூக்கள் பூக்கும் தாவரங்களில் மட்டுமே நடந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூக்களைப் பற்றிய புதிர் விடுபட்டது!

Related Tags :
Next Story