உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை விழா


உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 28 Jan 2018 2:30 AM IST (Updated: 27 Jan 2018 9:00 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை விழா, அசன பண்டிகை நடந்தது.

உடன்குடி,

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை விழா, அசன பண்டிகை நடந்தது.

தூய மாற்கு ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலயமும் ஒன்றாகும். ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை விழா, அசன பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 170–வது பிரதிஷ்டை விழா, அசன பண்டிகை கடந்த 19–ந் தேதி மாலையில் ஜெப பவனியுடன் தொடங்கியது.

விழா நாட்களில் கிறிஸ்தவ பாடல் இன்னிசை நிகழ்ச்சி, ஜான்தாமஸ் சபைமன்ற வாலிபர் முகாம், நற்செய்தி கூட்டம், சிறப்பு ஆராதனைகள், ஆசீர்வாத பெருவிழா, சபையார் கலைநிகழ்ச்சி நடந்தது.

விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலையில் தூத்துக்குடி– நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில், ஆலய பிரதிஷ்டை பண்டிகை, திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் சபை மக்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டனர். காலையில் அசன பணி தொடங்கப்பட்டது. பின்னர் ஐக்கிய விருந்து நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

இன்று, ஞானஸ்நான ஆராதனை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, திருவிருந்து ஆராதனை, மதியம் 12 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சேகர குருவானவர்கள் செல்வன் மகாராஜா, ஜான் சாமுவேல், ஆலய பரிபாலனர் எஸ்.ஞான்ராஜ் கோயில்பிள்ளை, தலைவர் ஜெ.பால்ராஜ், செயலாளர் பி.பிரின்ஸ், பொருளாளர் எஸ்.ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ், சபை ஊழியர் மோசஸ் மற்றும் சபை மக்கள் செய்து உள்ளனர்.

Next Story