தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநாட்டையொட்டி நாகர்கோவிலில் ஜோதி ஓட்டம்
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநாட்டையொட்டி, நாகர்கோவிலில் ஜோதி ஓட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் 3 நாள் மாநாடு நாகர்கோவில் புத்தேரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக புத்தேரி மேம்பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் சத்யநாராயண பூஜை என்ற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கணவனும், மனைவியும் இணைந்து நடத்தும் இந்த பூஜையில் ஏராளமான தம்பதியினர் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் 2–வது நாளான நேற்று ‘இந்து இளைஞர் எழுச்சி மாநாடு’ நடந்தது. இதையொட்டி காலையில் நாகர்கோவிலில் இந்து தர்ம ஜோதி ஓட்டம் நடைபெற்றது. முதலில் ஜோதியை கையில் ஏந்தியவர் செல்ல, அதைத்தொடர்ந்து இளைஞர்கள் ஓடினார்கள். அப்போது மேளதாளங்களும் இசைக்கப்பட்டன. இறுதியில் இரு சக்கர வாகனங்களும் அணி வகுத்து சென்றன. இந்த ஜோதி ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
நாகராஜா கோவில் திடலில் இருந்து தொடங்கிய ஜோதி ஓட்டம் மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார் சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் உள்ள சாலை, வடசேரி சந்திப்பு, ஆறாட்டு ரோடு, புத்தேரி மேம்பாலம் வழியாக மாநாடு நடைபெறும் இடத்தை சென்றடைந்தது.
அதன்பிறகு நடந்த மாநாட்டில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் மனோஜ்குமார் வரவேற்று பேசினார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியம், அகில உலக முன்னாள் செயல் தலைவரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனருமான வேதாந்தம் ஆகியோர் பேசினர்.
வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் பேசுகையில், ‘நாம் அனைவரும் நாட்டுக்காகவும், சமயத்துக்காகவும் தொண்டாற்ற முன் வரவேண்டும். நம் நாட்டில் நிறைய விவேகானந்தர் வரவேண்டுமானால் நாட்டுக்கு முழுநேர ஊழியராக வேண்டும். விவேகானந்தர் கண்ட கனவை நாம் நினைவாக்குவோம்‘ என்றார்.
ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியபோது, ‘இந்து இளைஞர்கள் பங்கேற்ற ஜோதி ஓட்டம் மிக எழுச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்தது. இந்து சமுதாயத்துக்கு இளைஞர்களின் பங்களிப்பு என்ன? என்பதை முதலில் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டில் கல்வித்தரம் குறைந்திருக்கிறது. ஆனால் பள்ளிகளும், கல்லூரிகளும் அதிகமாக உள்ளன. எனினும் பள்ளிகளும், கல்லூரிகளும் மாணவர்களை ஒரு முழுமையான மனிதனாக மாற்றவில்லை‘ என்று குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story