தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், ஜேம்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மாநில நிர்வாகிகள் ராசகுமார், நீலவானத்து நிலவன், தளபதி சுந்தர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், அந்திரிதாஸ், ஒன்றிய செயலாளர் மகேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் சிறப்புரையாற்றினார். இதில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காக்களூர் ஜெயசீலன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதியுறுவதை வலியுறுத்தும் விதமாக காக்களூரில் இருந்து திருவள்ளூர் வரை மாட்டு வண்டியில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் பஸ் கட்டணம் உயர்வு, ஜனநாயக ரீதியாக போராடும் மக்கள் மீது தடியடி, அமைச்சர்களின் ஆணவ பேச்சு உள்ளிட்டவைகளை கண்டித்தும், பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டி தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், அரசு, புகழேந்தி, நகர தி.மு.க செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜீ.வீ.மதியழகன், காஞ்சீபுரம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் அவளூர் சீனிவாசன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று பொன்னேரி அண்ணாசிலை முன்பு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் டாக்டர்.பரிமளம், மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் தமிழன் இளங்கோ, முன்னாள் அமைச்சர் சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.எஸ்.கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் சுகுமார், நகரசெயலாளர் டாக்டர்.விஸ்வநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன், ம.தி.மு.க. நிர்வாகி எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story