புறநகர் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
பஸ் கட்டணம் உயர்வால் சென்னை புறநகர் பகுதி மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்,
சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும், அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.40 மணிவரை 148 முறை மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது.
இதேபோல சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 37 முறையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு 37 முறையும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சீபுரம், திருமால்பூர் பகுதிகளுக்கு 8 முறை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதி மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அலுவலக நேரத்தில் மட்டுமே மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து நேரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்த போதிலும் புறநகர் பகுதி மின்சார ரெயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
கூட்டநெரிசல் காரணமாக ரெயில் பெட்டிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இவ்வாறு ரெயில் பெட்டிகளில் தொங்கிக்கொண்டு செல்பவர்கள், கீழே தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மின்சார ரெயில்களில் உள்ள 3 பெண்கள் பெட்டியிலும் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஆண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் பெண்கள் செல்ல வேண்டியநிலை உள்ளது. இதனால் கடும் கூட்டத்தின் நடுவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக இவர்கள், ரெயில் பெட்டியில் கூட்டநெரிசலில் சிக்கி தவிக்கும் போது தாங்கள் இறங்க வேண்டிய ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கூட்டத்தை கடந்து வெளியே வருவதற்குள் பெரும்பாடுபடுகின்றனர். இதனால் ரெயில்களும் கூடுதல் நிமிடங்கள் ரெயில் நிலையங்களில் நிற்கவேண்டியது உள்ளதால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் ரெயில்கள் தாமதம் ஏற்படுகிறது.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறைந்த மின்சார ரெயில்களே இயக்கப்படுவதால் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட்டநெரிசலில் ரெயிலில் பயணம் செய்ய முடியாமலும், கூடுதல் கட்டணம் செலுத்தி பஸ்களில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
புறநகர் பகுதியில் வாழும் நடுத்தர ஏழை மக்களுக்கு அவர்களின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ரெயில் பயணம் மட்டுமே போக்குவரத்துக்கு சாத்தியம் என்ற நிலையில், மின்சார ரெயில்களில் இரு மடங்காக அதிகரித்து உள்ள பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மின்சார ரெயில்களை தென்னக ரெயில்வே இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மின்சார ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Related Tags :
Next Story