ஜெயிலில் திடீர் உடல்நலக்குறைவு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கியவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை
கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கியவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர், சுயநினைவை இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 21-ந் தேதி அ.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழா நடந்தது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றிருந்தார். அப்போது அங்கு போளூரை சேர்ந்த வசந்தம் மணி (வயது 41) என்பவர் திடீரென எம்.எல்.ஏ. காலில் விழுந்து அவரை தாக்கினார்.
இதுகுறித்து போளூர் போலீசில் எம்.எல்.ஏ. புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தம்மணியை கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு வசந்தம் மணிக்கு சிறுநீருடன் ரத்தம் கலந்து சென்றது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 25-ந் தேதி மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அன்றைய தினம் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயில் அதிகாரிகள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் சுயநினைவின்றி வசந்தம்மணி உள்ளதாகவும், விரைவில் நினைவு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்கள், செவிலியர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசாரும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story