குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2018 4:15 AM IST (Updated: 28 Jan 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது நடவடிக்கை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் ரவிஜெயராம் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் ரவிஜெயராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 124 நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது

அப்போது தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா?, தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் உரிய முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத, உரிய முன் அறிவிப்பு இன்றி வேலையில் அமர்த்தியதாக 24 கடைகள், 47 உணவு நிறுவனங்கள், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story