கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்


கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:00 AM IST (Updated: 28 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி, கோவிந்தராசன், பேரூர் செயலாளர் பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்செல்வன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்று பேசினார்.

இதில் சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் முகமதுசகி பங்கேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், தலைமை கழக பேச்சாளர் பவானி கேசவன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வேலுமணி நன்றி கூறினார்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் தி.மு.க. வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குப்புராஜி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாபுசிவக்குமார் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் அமானுல்லா, வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் கலந்துகொண்டு பேசினார்.

இதில் தலைமை கழக பேச்சாளர் காமராஜ், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமி, மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினிசெல்வம், துணை தலைவர் குமரேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜீவானந்தம், சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story