போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிள் திருடன் கைது
காரைக்காலில் நேற்று அதிகாலை போலீசார் நடத்திய வாகன சோதனையில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டார். அவனிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
காரைக்கால்,
காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் காரைக்கால் காமராஜர்சாலை, புளியங்கொட்டைசாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புளியங்கொட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
எனவே சந்தேகமடைந்த போலீசார் அவரை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது அவர் காரைக்கால் காமராஜர் சாலையை சேர்ந்த ரிச்சர்டு டேவிட் (59) என்பதும், கடந்த 2010ம் ஆண்டு காரைக்கால் பைபாஸ் சாலையில், விளையாட்டு மைதானம் அருகில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடியது, கடந்த 2012ம் ஆண்டு காரைக்கால் லெமேர் வீதியில் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடியது, கடந்த 2014ம் ஆண்டு புதுச்சேரி பெரியகடை காவல்நிலைய பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடியது ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தவர் என்பது தெரிய வந்தது.
மேலும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஆகஸ்டு மாதம் காரைக்கால் சிங்காரவேலர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் வாசலில் திருடியது என்பதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அந்த மோட்டார் சைக்கிளில் போலியாக புதுச்சேரி மாநில பதிவு எண்ணை ஒட்டி ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின்பேரில் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபம் வாயில், புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகில் மற்றும் மார்க்கெட் பகுதியில் திருடப்பட்ட மேலும் 3 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி நேற்று மாலை காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story