மாவட்டம் முழுவதும் கிராம சபை கூட்டம்
மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தேனி,
தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தது. இதில் போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பத்திரகாளிபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் தனிநபர் கழிப்பறை அனைத்து வீடுகளிலும் அவசியம் அமைக்கவேண்டும் என்பன உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் வடிவேல், தேனி உதவி இயக்குனர் அபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி மற்றும் ஊராட்சி செயலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிலமலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாராணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சிலமலையில் உள்ள தெப்ப குளத்தை தூர்வார வேண்டும், மல்லிங்காபுரம், சூலப்புரத்தில் புதிதாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை விரைந்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் உப்புக்கோட்டை, கூழையனூர், காமராஜபுரம் மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர், உப்பார்ப்பட்டி, வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story