தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி,
நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையொட்டி ஊட்டியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகமாக வந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது. பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், பெரணி இல்லம், அலங்கார செடிகள், இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, ஜப்பான் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பூங்கா நுழைவுவாயில் பகுதியில் டிக்கெட் எடுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது. அங்கு துடுப்பு படகு, மிதி படகு மற்றும் மோட்டார் படகில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர். படகு சவாரியின் போது, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மான் பூங்காவில் உள்ள கேளை மான்கள், கடமான்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
தமிழத்திலேயே 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரம் உள்ள மலைசிகரமான தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கி மூலம் மலைகளின் இயற்கை காட்சிகள், எல்லைப்பகுதிகள், அணைகள், ஊட்டி நகரத்தின் தோற்றம் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்ததால், ஊட்டியில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், அரசு தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, ஊட்டி-குன்னூர் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தொட்டபெட்டா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சென்றதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story