காட்டுமன்னார்கோவிலில் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்


காட்டுமன்னார்கோவிலில் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:15 AM IST (Updated: 28 Jan 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். அப்போது தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் ராஜேந்திரசோழகன் பகுதியில் சாவடிக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் 16 பேர் வீடுகள், மாட்டுக் கொட் டகை, கழிப்பறை போன்றவைகளை கட்டி ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இடங்களை காலி செய்யுமாறு பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு இடங்களை காலி செய்யவில்லை.இந்த நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் தாசில்தார் சிவகாமசுந்தரி, பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்ட குளக்கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், 3 வீடுகள் உள்பட 16 பேரின் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளி வைத்தியநாதன் என்பவர் திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரிடமிருந்த மண்எண்ணெய் கேனை பிடுங் கினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story