பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:45 AM IST (Updated: 28 Jan 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன. அதன்படி இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மதுரை மாநகர் தெற்கு மற்றும் வடக்கு தி.மு.க. சார்பில் அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகிலும், மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செக்கானூரணியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணாநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், ம.தி.மு.க. பூமிநாதன், மனிதநேய மக்கள் கட்சி கவுஸ்மொய்தீன், பார்வர்டு பிளாக் அம்மாவாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செக்கானூரணியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். சேடப்பட்டி முத்தையா, முன்னாள் எம்.பி.அக்னிராஜ், காங்கிரஸ் கட்சியின் ஜெயராமன், ரவிசந்திரன், பார்வர்டு பிளாக் கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இன்குலாப், செல்வராஜ், ம.தி.மு.க, விவசாய தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story